6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஒரு இடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.
குரூப்-4 பணியிடங்கள்
குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி வெளியிட்டது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. நடத்தக்கூடிய தேர்வுகளில் அதிகமானோர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர்.
20 லட்சம் பேர் விண்ணப்பம்
விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த மாதம் 28-ந் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியான 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.