மீமிசல் வழியாக செல்லும் தொலைத்தூர இடங்களுக்கு மஞ்சள் நிற பேருந்து இயக்கம் - மஞ்சள் நிற பேருந்தில் இவ்வளவு வசதிகள் இருக்கா - வாங்க பார்க்கலாம்




மீமிசல் வழியாக செல்லும் தொலைத்தூர இடங்களுக்கு மஞ்சள் நிற பேருந்து இயக்கம் - மஞ்சள் நிற பேருந்தில் இவ்வளவு வசதிகள் இருக்கா - வாங்க பார்க்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் கிழக்கு கடற்கரை சாலையில் சிறு நகராக உள்ளது மீமிசல்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுரை, தேவகோட்டை, காரைக்குடி, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன. இதுதவிர ராமேஸ்வரம், சாயல்குடி, திருப்புனவாசல், வேதாரண்யம், தஞ்சாவூர், திசையன்விளை வேளாங்கன்னி, ஏர்வாடி, சிதம்பரம், புதுச்சேரி மற்றும் , ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன

இந்நிலையில் மீமிசல் வழியாக செல்லும்  தொலைத்தூர பேருந்துகள் மஞ்சள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன அது எந்த எந்த ஊரில் இருந்து புறப்பட்டு எங்கே சேருகிறது வாங்க பார்க்கலாம் 

 அறந்தாங்கி - திருச்செந்தூர்

 திருச்சி - இராமேஸ்வரம்

 கோயம்புத்தூர் - தொண்டி

 தஞ்சாவூர் - இராமேஸ்வரம்

 கும்பகோணம் - இராமேஸ்வரம்

 நாகப்பட்டினம் - இராமேஸ்வரம்

 வேதாரண்யம் - இராமேஸ்வரம்

 வேளாங்கண்ணி - திசையன்விளை









மஞ்சள் நிறத்தில் மாறும் அரசு பஸ்கள்! இதுல இருக்குற வசதிகள் என்ன என்ன வாங்க பார்க்கலாம் 

தமிழ்நாட்டில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அடுத்த 6 மாதங்களில் 1000 பஸ்கள் வரவுள்ளது. இந்த பேருந்துகளில் உள்ள வசதிகள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் அரசு பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு சிறந்த பேருந்து சேவைகளை வழங்க அவ்வப்போது தமிழ்நாடு அரசு பேருந்துகளை அப்டேட் செய்து வருகிறது.

இதில் புதிய மஞ்சள் பேருந்துகளில் பழைய பேருந்துகளில் இல்லாத அளவு சில முக்கியமான வசதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது முக்கியமாக இந்த பேருந்துகளின் படிக்கட்டுகள் வயதானவர்களும் ஏறக்கூடிய அளவில் குறைவான உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது படிக்கட்டுகள் ரோட்டுக்கு மிக அருகில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஸ்சுக்கு உட்புறம் வழக்கமான பழைய பஸ்களில் 57 சீட்டுகள் இருக்கும் ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள பஸ்களில் 52 சீட்டுகள் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சீட்டில் அமர்ந்து வருபவர்களுக்கு அதிக இட வசதி இருக்கிறது. குறிப்பாக உயரமானவர்கள் சீட்டில் அமர்ந்தால் அவர்கள் முட்டி தட்டாதவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்ஸில் மற்றொரு முக்கியமான அப்டேட் என்றால் அது செல்போன் சார்ஜர் தான். பொதுவாக அரசு பஸ்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி இருக்காது. ஆனால் இனி இந்த பஸ்களில் இரண்டு சார்ஜிங் பாய்ண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவைப்பட்டால் இதை அவசர நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த பஸ்ஸில் முக்கியமாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகளை டிரைவர் மட்டுமே ஆப்ரேட் செய்ய முடியும். பஸ்ஸில் வேகமாக செல்லும் போது தானியங்கி கதவுகளை மூடிவிட்டால் பஸ்ஸிலிருந்து யாரும் ரன்னிங்கில் ஏறவோ இறங்கவோ முடியாது. இதனால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

இந்த பஸ்சின் நிறத்தை பொருத்தவரை மஞ்சள் மற்றும் வெளிர்மஞ்சள் ஆகிய நிறங்களை வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய டிசைனில் இந்த பஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் இருக்கைகள் எல்லாம் அதிக குஷன் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அரசு பஸ்களில் பயணிகள் சிரமம் என்று பயணம் செய்யலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments