மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி & மங்களூரு - ராமேஸ்வரம் புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி




மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி & மங்களூரு - ராமேஸ்வரம் புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது 

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம்

கோவை வழியே மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே புது ரயில் சேவை அறிமுகமாகிறது!

மேட்டுப்பாளையம் மற்றும் தூத்துக்குடி இடையே புது ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


தற்போது வெளியாகி உள்ள அட்டவணைப்படி இந்த ரயில் சேவை (ரயில் எண் 16766/16765) வியாழன் முதல் ஞாயிறு வரை இடம்பெறும்.

இந்த ரயில் ஆனது தூத்துக்குடியில் இருந்து இரவு 10:50 க்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 1:15க்கும் கோவைக்கு காலை 6:18 க்கும் மேட்டுப்பாளையத்திற்கு காலை 7:15க்கும் வந்து சேரும்.

பின்னர் இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு இரவு 8:40க்கும் மதுரைக்கு இரவு 1: 15க்கும் தூத்துக்குடிக்கு அதிகாலை 4:20க்கும் இந்த ரயில் வந்து சேரும்.
வழி:

தூத்துக்குடி
விருதுநகர்
மதுரை
திண்டுக்கல்
பழனி
பொள்ளாச்சி
கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்

மங்களூர் - இராமேஸ்வரம்

அதேபோல மங்களூரு முதல் ராமேஸ்வரம் வரையிலான மற்றொரு புது ரயில் சேவையும் அறிமுகமாகிறது
 
இந்த ரயில் சேவையானது ( ரயில் எண் 16622/16621) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும்.இந்த ரயில் மங்களூரில் இருந்து சனி இரவு 7:30 க்கு புறப்பட்டு, இரவு 2:10 க்கு பாலக்காடு, ஞாயிறு அதிகாலை 4:05 மணிக்கு பொள்ளாச்சி, மற்றும் காலை 11:45 க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

பின்னர் மதியம் 2 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:35 க்கு பொள்ளாச்சி 11:20 க்கு பாலக்காடு மற்றும் திங்கள் காலை 5:50க்கு மங்களூரு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வழி:

மங்களூர்
கன்னூர்
கோழிக்கோடு
பாலக்காடு
பொள்ளாச்சி
உடுமலைப்பேட்டை
திண்டுக்கல்
மதுரை
மானாமதுரை
இராமநாதபுரம் 
இராமேஸ்வரம்

மேலும் தூத்துக்குடி திருநெல்வேலி இடையே இயங்கி வந்த சிறப்பு ரயில் சேவையானது நிறுத்தப்படுவதாகவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு புதிய ரயில் சேவைகளை விரைவில் அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் ஒப்புதல் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments