கோட்டைப்பட்டினம் அருகே போதை மாத்திரைகள் விற்ற 4 வாலிபர்கள் கைது






கோட்டைப்பட்டினம் அருகே போதை மாத்திரைகள் விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரைகள்

புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் அதிகளவு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த வாரங்களில் இப்பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் கடலோர பகுதிகளில் இளைஞர்கள் அதிகளவு போதை மாத்திரைகள் உட்கொள்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கோட்டைப்பட்டினம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், தனிப்படையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் தர்கா அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் கையில் போதை மாத்திரைகள் இருந்துள்ளது.

4 பேர் கைது

இதையடுத்து அவர்களை கைது செய்து, கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு அைழத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் மற்றும் போதை மாத்திரை உட்கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த நல்ல முகமது மகன் அப்துல் ரகுமான் (வயது 29), நசீர் மகன் ஷேக் அப்துல்லா (25), கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலந்தர் மறைக்காயர் மகன் முகமது அப்துல்லா (24), காஜா மைதீன் மகன் அப்துல்லா அகது (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments