6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பும் பணி தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மெர்சிரம்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் விபரத்தினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கினார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு வைப்பறையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வி.வி.பேட் எந்திரங்களை வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து அனுப்பி வைக்கும் பணியினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாசலம், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments