புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.84 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
91.84 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 770 மாணவர்களும், 11 ஆயிரத்து 86 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 856 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதியிருந்தனர்.
இதில் 9 ஆயிரத்து 562 மாணவர்களும், 10 ஆயிரத்து 511 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவர்கள் 88.78 சதவீதமும், மாணவிகள் 94.81 சதவீதமும் தேர்ச்சி விகிதமாகும். மொத்தம் 91.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை ஒப்பிடுகையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் பார்வையிட்டனர்
தேர்வு முடிவுகள் நேற்று காலையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தங்களது செல்போனில் பார்வையிட்டனர். மேலும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் விவரத்துடன் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலமும் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவு விவரத்தை அறிந்து கொண்டனர்.பள்ளிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் விவர பட்டியலை சேகரித்தனர். பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அழைத்து பாராட்டினர்.
இனிப்புகள் வழங்கினர்
தேர்வில் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இனிப்புகளை பிறருக்கு வழங்கியும், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை பெற்றோர், ஆசிரியர்கள் வழங்கியும் வாழ்த்தினர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தாங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மேல்நிலை கல்வியான பிளஸ்-1 வகுப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்வதென மாணவ-மாணவிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 90 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதில் 35 அரசு பள்ளிகள் சாதனை படைத்தன.
100 சதவீதம் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினர். இதில் 35 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம், மெட்ரிக்குலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகள் 49-ம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. மாவட்டத்தில் மொத்தம் 90 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
அரசு பள்ளிகள்
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் விவரம் வருமாறு:- 1) முள்ளன்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 2) பிலாவிடுதி அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, 3) கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 4) மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, 5) கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 6) எருக்கலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, 7) எஸ்.குளவாய்ப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, 8) பள்ளத்துவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி, 9) பேரையூலூர் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 10) நற்பவளசெங்கமாரி அரசு உயர்நிலைப்பள்ளி, 11) இடையாற்றுமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, 12) ஆயிங்குடி தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 13) வாளவாரி கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 14) அரசர்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 15) சூரன்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி.
பெண்கள் பள்ளி
16) தாளனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 17) மங்களமேடு கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 18) பொன்பேத்தி அரசு உயர்நிலைப்பள்ளி, 19) குளமங்கலம் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி, 20) சிலட்டூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, 21) பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, 22) பொன்னன்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி, 23) குருங்களூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 24) குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, 25) புதுக்கோட்டை மாவட்டம் அரசு மாதிரி பள்ளி, 26) பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 27) புதுக்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 28) குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி, 29) கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, 30) மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 31) திருக்கோகர்ணம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, 32) முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 33) சம்பட்டிவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி, 34) புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, 35) பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.