10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வட்டார அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்த‌ மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் தேர்வு முடிவை வெளியிட்டனர். .

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  10.05.24 வெள்ளிக்கிழமை வெளியான நிலையில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பாப்புலர் பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் பள்ளி அளவில் 482/500 மதிப்பெண் பெற்று ஜனனி என்ற மாணவி முதல் இடத்திலும், 480/500 பெற்று அப்னான் சபாப் என்ற மாணவன் இரண்டாம் இடத்திலும் 475/500 மதிப்பெண் பெற்று அப்சர் கான் என்ற மாணவன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சுற்றுவட்டார அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

இந்த தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் கணித பாடத்தில் 8 பேர் 100/100 மதிப்பெண் பெற்றும், ஆங்கில பாடத்தில் 1 மாணவர் 100/100 மதிப்பெண் பெற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments