கோடியக்கரை கடற்கரையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கோடியக்கரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி அருகே கோடியக்கரையில் கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரை அருகே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்டவையும், கடற்கரை பகுதியை காணும் வகையில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. காட்சி கோபுரம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இருந்து கடலை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவது உண்டு.
சுற்றுலா தலம்
இந்த நிலையில் கோடியக்கரை கடற்கரையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக வனத்துறை மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் கோடியக்கரை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கடற்கரையில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் வசதி அமைத்தல், சிறுவர்கள் உள்பட பெரியவர்கள் பொழுதை கழிக்கும் வகையில் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல காட்சி கோபுரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. கோடியக்கரைக்கு செல்லும் வழியில் சாலை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பின் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோடியக்கரை கடற்பகுதியில் இருந்து கடலை ரசிக்க மிகவும் அழாக இருக்கும். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தையும் இங்கிருந்து பார்க்க முடியும். மேலும் மாலை நேரப்பொழுதில் இப்பகுதி அழகாக இருக்கும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.