சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; 1 ஆண்டு வாகன உரிமம் ரத்து பாபநாசம் கோர்ட்டு உத்தரவு




சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் வித்தும், 1 ஆண்டு வாகன உரிமம் ரத்து செய்தும் பாபநாசம் கோர்ட்டு உத்தரவிட்டது.

வாகன சோதனை

பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் பாபநாசம் ெரயிலடியை சேர்ந்த முகமது மகனான 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சிறுவனை இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கை விசாரித்த பாபநாசம் நீதிபதி அப்துல் கனி, சிறுவனுக்கு ஓட்ட இருசக்கர வாகனம் வழங்கியதற்காக வாகன உரிமையாளர் முகமதுவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 1 ஆண்டு வாகன உரிமம் ரத்தும் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் போலீசார் வாகன சோதனையில்ஈடுபட்ட போது திருக்கருகாவூர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் உரிமையாளர் பாலமுருகன் இருசக்கர வாகனத்தை சிறுவனிடம் கொடுத்து சாலையில் ஓட்ட அனுமதித்து தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டது. நீதிபதி அப்துல் கனி இருசக்கர வாகன பழுது நீக்கும் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments