ஆவுடையார்கோவில் அரசு கலை & அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு






புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.
 
இக்கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் ரமேஷ், ஆங்கிலத்துறை தலைவர் கணேசேன், கணிதத்துறை தலைவர் கிளாடிஸ் மற்றும் கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments