அறந்தாங்கி தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி ST.ராமச்சந்திரன்.MLA தமிழக உள்துறைச் செயலாளர் P.அமுதா அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தல்!அறந்தாங்கி தொகுதியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் தமிழக உள்துறைச் செயலாளர் P.அமுதா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்து வரும் அறந்தாங்கி நகரில் உள்ள காவல் நிலையத்தை பெரிய ரக காவல் நிலையமாக மேம்படுத்தவும், அறந்தாங்கி நகரின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் கூடுதல் காவல் நிலையம் ஒன்றும் அமைத்துத்தரக் கோரியும், ஆவுடையார்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீர் தாங்கி வண்டி 2000-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளதால், தீயணைப்பு பணிகளுக்கு விரைந்து செல்ல இயலாத நிலை உள்ளது. இதனை மாற்றி புதிய நீர் தாங்கி வண்டி வழங்கவும், பூங்குடி கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டித்தரவும், கரூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கி ஆவணம் செய்திட கோரியும் தமிழக உள்துறைச் செயலாளர் P.அமுதா இ.ஆ.ப அவர்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments