காரைக்குடியிலிருந்து மதுரை சென்ற அரசு சொகுசுப் பேருந்து திருப்பத்தூர் அருகே பைபாஸ் சாலையில் எதிர்பாராத விதமாக புளிய மரத்தின் மீது மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயம்.




சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து இன்று காலை அரசு சொகுசுப் பேருந்து மதுரை சென்று கொண்டிருந்தது.  திருப்பத்தூர் அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஓட்டுநருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments