மணமேல்குடி அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய திமிங்கலத்தின் எலும்புகள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
அரசு அருங்காட்சியகம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கடந்த 1910-ம் ஆண்டில் தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும். தமிழகத்தின் பெரிய அரசு அருங்காட்சியகத்தில் இது 2-வதாக திகழ்கிறது. தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், கல்வெட்டுகள், கற்சிலைகள், உலோக படிமங்கள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு.
திமிங்கலத்தின் எலும்புகள்
கோடை காலத்தில் பொதுமக்கள் வருகை அதிகமாக காணப்படும். மேலும் சுற்றுலா இடங்களில் அரசு அருங்காட்சியகமும் ஒன்றாக அமைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருகை தரும் போது பார்வையிடுவது உண்டு.
இந்த நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் திமிங்கலத்தின் கீழ் தாடை எலும்புகள் 2-ம், முதுகெலும்பு தண்டுவட எலும்பு ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த திமிங்கலத்தின் எலும்புகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:-
மணமேல்குடி கடலோர காவல் படை போலீசாரிடம் இருந்து இந்த திமிங்கல எலும்புகள் பெறப்பட்டது. அதில் வேதிப்பொருட்கள் தடவி பாதிக்காத வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடற்கரையில் ஒதுங்கியது
மணமேல்குடி அருகே கடற்கரையோர பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தது. அதனை கடற்கரை மணற்பரப்பு அருகே புதைத்திருக்கின்றனர். அதில் இருந்து தான் இந்த தாடை எலும்புகள் கிடைத்துள்ளன. இதனை கடலோர காவல்படை போலீசார் வைத்திருந்தனர். அதனை பெற்று அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். இதனை காட்சிக்காக கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்படவும் உள்ளது.
இவ்வாறு கூறினர்.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த திமிங்கலத்தின் எலும்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.