அறந்தாங்கி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (07.02.2026) சனிக்கிழமை அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி நகர உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி அழியாநிலை 110/33-11 KV துணை மின் நிலையம், அறந்தாங்கி 33/11 KV துணை மின் நிலையம் மற்றும் மறமடக்கி 33/11 KV துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இந்த மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அறந்தாங்கி நகர் பகுதிகள், அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார் மற்றும் கம்மங்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
மேலும், துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், மறமடக்கி, திருநாளூர், சிட்டங்காடு, கறம்பக்காடு மற்றும் சுனையக்காடு ஆகிய கிராமப் பகுதிகளிலும் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் இந்த மின் தடையினால் ஏற்படும் சிரமங்களுக்கு மின்வாரியத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.