சென்னை தாம்பரம் - இராமநாதபுரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் வாரம் மும்முறை சிறப்பு ரயிலாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு





சென்னை தாம்பரம் - இராமநாதபுரம் வாரம் இருமுறை சிறப்பு ரயில் வாரம் மும்முறை சிறப்பு ரயிலாக மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

வண்டி எண் 06103/06104 சென்னை தாம்பரத்தில் இருந்து 19-09-2024 முதல் 30-09-2024 வரை (வாரந்தொறும் திங்கட்கிழமை வியாழக்கிழமை & சனிக்கிழமை) மறுமார்க்கத்தில் இராமநாதபுரத்தில் இருந்து 20-09-2024 முதல் 01-10-2024 வரை (செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை)  இயக்கிட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06103 சென்னை தாம்பரம் - இராமநாதபுரம் 

சென்னை தாம்பரத்தில் இருந்து  ஒவ்வொரு வாரமும் திங்கள் வியாழன் சனி கிழமைகளில்  மாலை 5-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 05.55  மணியளவில் இராமநாதபுரம் சென்றடையும் 

வண்டி எண் : 06104
இராமநாதபுரம் ‌- சென்னை தாம்பரம் 
 
மறுமாா்கத்தில்  இராமநாதபுரத்தில் இருந்து சிறப்பு விரைவு ரயில் செவ்வாய் வியாழன் ஞாயிறு கிழமைகளில் இராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55   மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவு   11.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் 

சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??

தாம்பரம்
செங்கல்பட்டு 
மேல்மருவத்தூர் 
விழுப்புரம்  
கடலூர் துறைமுகம்
சிதம்பரம் 
சீர்காழி
மயிலாடுதுறை
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டை
அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை
பேராவூரணி
அறந்தாங்கி 
காரைக்குடி
கல்லல் 
சிவகங்கை
மானாமதுரை
பரமக்குடி
ராமநாதபுரம்

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த சிறப்பு விரைவு ரயிலில் 7 முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.
 

முக்கிய குறிப்புகள்

*  வண்டி 06051/06052 தாம்பரம் - ராமநாதபுரம் வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் வண்டி எண் 06103/06104 என்ற எண் மாற்றத்துடன் வாரம் மும்முறை சேவையாக வாரந்தோறும் திங்கள் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்களில் தாம்பரத்தில் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும்  இயக்கப்பட உள்ளது.

* வண்டி எண் 06104 ராமநாதபுரம் - தாம்பரம் பகல்நேர சேவையாகவும் (ராமநாதபுரம் புறப்பாடு காலை 10-40 மணி), வண்டி எண் 06103 தாம்பரம் - ராமநாதபுரம் இரவு நேர சேவையாகவும் ( தாம்பரம் புறப்பாடு மாலை 5-00 மணி) இயக்கப்பட உள்ளது.

* .இராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறந்த பிறகு இராமேஸ்வரத்திற்கு நீட்டிக்கப்பட்டு தினசரி வண்டியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments