இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரி குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் குடும்பத்தினர் சிலர் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:-
ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு நாட்களில் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் விடுதலையாகினர்.
சிறையில் மீனவர்கள்
இதற்கிடையில் அவர்களுடன் கைதானவர்களில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சாரதி (வயது 23), மணிகண்டன் (32), சுபாஷ் (24), செல்வகுமார் (44), ஆனந்த் பாபு (36), குபேந்திரன் (25), மற்றொரு மணிகண்டன், சரண் (24), பிரதீப், ரமேஷ் ஆகிய 10 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனையும், சிலருக்கு 2 ஆண்டுகள், ஓராண்டு சிறை தண்டனை, 6 மாதம் தண்டனையும் விதிக்கப்பட்டு தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 10 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு அளிக்க வந்தவர்களில் மீனவர்கள் சிலரின் மனைவிகள் கைக்குழந்தைகள், குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் தங்களது கணவர்களை மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
303 மனுக்கள்
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கான வேலையில் இருந்ததால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பு இல்லாமல் சற்று வெறிச்சோடி இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.