மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டம் ஒரு நாள் பயிற்சி




மணமேல்குடி ஒன்றியத்தில்  புதிய பாரத திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்டம் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய  திரு சண்முகம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மைய தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி அமுதா அவர்கள் தொடங்கி வைத்தார். 

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் எழுதப் படிக்க தெரியாத கற்போருக்கு எழுத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் எழுத்துக்களை எழுதுவதற்கு கற்றுக் கொள்வதற்கும் தனது பெயர் தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர் எழுதி பழகுவதற்கும், அதேபோல் பேருந்து பயணம் செல்லும் பொழுது ஊர்களின் பெயர்களை தெரிந்து கொள்வதற்காகவும் கையெழுத்து போடுவதற்காகவும்   கற்போருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 அதேபோல் வாழ்வில் திறன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி கற்போருக்கு விழிப்புணர்வுனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பயிற்சியினை  ஆசிரியர் பயிற்றுநர்கள்  திரு சசிகுமார்  திரு பன்னீர்செல்வம் ஆகியோர்  வழங்கினார்கள்., இந்நிகழ்வில்  தன்னார்வலர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments