புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி




புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில் பஸ்கள் நுழையும் இடத்திலேயே சில அரசு பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதேபோல அதன் எதிர்புறம் பஸ் நிறுத்தத்திலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் போது சிரமம் ஏற்படுகிறது. இதனால் சில நிமிடங்கள் நின்று பஸ் நிலையத்திற்குள் நுழைகிறது. அந்த நேரத்தில் மற்ற பஸ்களும், வாகனங்களும் அந்த சாலையில் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

கோரிக்கை

எனவே புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.மேலும் பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை முறையாக வரிசையாக நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய பகுதியில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments