புனித ரமலான் 2026: கோபாலப்பட்டிணத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் நேரம் வெளியீடு!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியைச் சேர்ந்த கோபாலப்பட்டிணத்தில், இந்த ஆண்டு (2026) ரமலான் புனித மாதத்தை முன்னிட்டு தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் கமிட்டியினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஊரின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகத் தொழுகை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆண்களுக்கான தொழுகை இடங்கள்

கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு மொத்தம் 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறவுள்ளது:

  1. ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)
  2. காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
  3. அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
  4. கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு)
  5. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஷஃபா தெரு)

பெண்களுக்கான தொழுகை இடங்கள்:

​பெண்கள் தொழுவதற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:

  1. ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் அய்ன் வளாகம் (அரஃபா தெரு)
  2. காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)
  3. அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)
  4. கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு)
  5. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஷஃபா தெரு)

தொழுகை நேரங்கள்:

​ரமலான் மாதம் முழுவதும் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்கான நேரங்களில் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

  • இஷா பாங்கு: இரவு 7:46 மணி
  • இஷா இகாமத் (பெண்களுக்கு மட்டும்): இரவு 8:30 மணி (ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் அய்ன் வளாகம்)
  • இஷா இகாமத் (அனைத்து பள்ளிவாசல்கள்): இரவு 8:45 மணி
  • தராவீஹ் தொழுகை இரவு 9.00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இஷா தொழுகை- 8.30, தராவீஹ் தொழுகை - 8.50 (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை)

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்." (அல்குர்ஆன்: 2:183)

​புனித ரமலான் மாதத்தில் இறையச்சத்தோடும், நற்கூலியை எதிர்பார்த்தும் மக்கள் இந்த வணக்க வழிபாடுகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments