தமிழகத்தில் நாளை முதல் புனித ரமலான் நோன்பு தொடக்கம்!



தமிழகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டதை அடுத்து, நாளை (பிப்ரவரி 19, வியாழக்கிழமை) முதல் புனித ரமலான் நோன்பு தொடங்குவதாகத் தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தீன் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (புதன்கிழமை, 18-02-2026) மாலை ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது.

தராவீஹ் தொழுகை
நோன்பு தொடங்குவதை முன்னிட்டு, இன்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகையான 'தராவீஹ்' நடைபெறும்.

இறை அருளும் அமைதியும் சூழும் இந்த புனித மாதத்தில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு இறைவனின் அருளைப் பெற வேண்டும் என தலைமை காஜி அலுவலகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments