புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்தில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 100 நாட்களில் 100 சதவீத தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை அடைவதற்கான மதிப்பீட்டுப் பணி நடைபெற்றது.
இந்த மதிப்பீட்டுப் பணியானது, மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு. செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் திருமதி அமுதா மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலையில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாதனை படைத்த பள்ளிகள்
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபட்டினம் (பெண்கள்), கோட்டைப்பட்டினம் (பெண்கள்), ரெட்டையாளம், செல்லப்பன் கோட்டை, நெம்மேலி வயல், வேட்டணி வயல் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளிலும்; வடக்கு அம்மாபட்டினம் (முஸ்லிம்), மஞ்சக்குடி, சிங்கவனம், கரகத்திக்கோட்டை ஆகிய நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வின் முடிவில், மேற்கண்ட 10 பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் 100 நாட்களில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களில் 100 சதவீத முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆய்வுக் குழுவினர்
ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு. சசிகுமார், திரு. பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர்கள் திரு. கண்ணன், திரு. வீர செல்வம் ஆகியோர் மாணவர்களின் கல்வித் திறன்களை மதிப்பீடு செய்தனர். 100 சதவீத இலக்கை எட்டிய மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அதிகாரிகள் பாராட்டினர்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.