ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்




ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அமேசான் வலை சேவை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறு தொடக்கம் செயற்கை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான கால அளவு 2 மாதம் ஆகும். 10 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

ஒப்பனை- அழகுக்கலை

ஒப்பனை மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்கு 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும் இந்த பயிற்சி ராணிப்பேட்டை மற்றும் கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இங்கு தங்கு வசதிகள், உணவுகள் உள்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இந்த பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் 18 முதல் 37 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். இந்த பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும் இந்த பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.

வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இந்த பயிற்சிகளில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments