புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டுவரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பின்வரும் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், எம்.எஸ். ஆபிஸ் கணினி பிரிவில் குறைந்தபட்சம் 3 மாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், 5 வருடம் மகளிர் சுய உதவிக்குழுவிலோ அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலோ முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், தொடர்புடைய ஒன்றியத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், எவ்வித குறைபாடுகளுமின்றி சிறப்பாக பணி செய்தவராக இருத்தல் வேண்டும். எனவே, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஒரு மூடிய உறையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்கவோ அல்லது இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகில், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.