புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 34 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை தனி தாசில்தாராக (முத்திரைத்தாள்) பணியாற்றிய ஜெயபாரதி, விராலிமலை வருவாய் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். விராலிமலை தாசில்தார் ரமேஷ் புதுக்கோட்டை அலுவலக மேலாளராக (கலால்) மாற்றப்பட்டார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலக மேலாளர் (கலால்) கலைமணி, கந்தர்வகோட்டை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.
தனி தாசில்தார்
கந்தர்வகோட்டை தனி தாசில்தார் மனோகரன், புதுக்கோட்டை காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய மார்ட்டின் லூதர் கிங் மணமேல்குடி வருவாய் தாசில்தாராக மாற்றப்பட்டார். கந்தர்வகோட்டை தாசில்தார் ரமேஷ் ஆவுடையார்கோவில் தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தனி தாசில்தார் பவானி புதுக்கோட்டை தனி தாசில்தாராக (கோவில் நிலங்கள்) மாற்றப்பட்டார். புதுக்கோட்டை தனி தாசில்தாராக (எச்.ஆர்.சி.இ.) பணியாற்றிய வனிதா புதுக்கோட்டை தனி தாசில்தாராக (முத்திரைத்தாள்) மாற்றப்பட்டார்.
மணமேல்குடி தனி தாசில்தாராக பணியாற்றிய சிவகுமார் ஆவுடையார்கோவில் வருவாய் தாசில்தாராகவும், ஆவுடையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். இங்கு பணியாற்றிய முத்துக்கருப்பன் பொன்னமராவதி தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். பொன்னமராவதி தனி தாசில்தாராக பணியாற்றிய பழனிசாமி பொன்னமராவதி வருவாய் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.
பொன்னமராவதியில் பணியாற்றிய தாசில்தார் சாந்தா, விராலிமலை தனி தாசில்தாரகவும், இங்கு பணியாற்றிய முருகப்பன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக தனி தாசில்தாராக (பேரிடர் மேலாண்மை) மாற்றப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய செந்தில்குமார் புதுக்கோட்டை வருவாய் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை தாசில்தார்
இதேபோல் புதுக்கோட்டை தாசில்தார் செந்தில் நாயகி, திருமயம் தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய பொன்மலர் மணமேல்குடி தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். குளத்தூர் வருவாய் தாசில்தாராக பணியாற்றிய சோனைக் கருப்பையா, இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணியாற்றிய சதீஷ் சரவணகுமார் கீரனூர் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
இங்கு பணியாற்றிய சுரேஷ் ஆவுடையார்கோவில் தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவுடையார்கோவில் தனி தாசில்தாராக பணியாற்றிய கவிதா புதுக்கோட்டை தனி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய பிரவீனா மேரி கறம்பக்குடி வருவாய் தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கறம்பக்குடி தாசில்தாராக பணியாற்றிய ஜமுனா அறந்தாங்கி கோட்டக் கலால் அலுவலராகவும், இங்கு பணியாற்றிய பரணி கந்தர்வகோட்டை வருவாய் தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அறந்தாங்கி தனி தாசில்தாராக பணியாற்றிய ஜபருல்லா, ஆலங்குடி வருவாய் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய தாசில்தார் வில்லியம் மோசஸ் புதுக்கோட்டை காவேரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்ட அழகு- 3 தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிய தனி தாசில்தார் ரெத்தினாவதி அறந்தாங்கி தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.
34 தாசில்தார்கள்
இதேபோல் மணமேல்குடி தனி தாசில்தார் ஷேக் அப்துல்லா அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை தனி தாசில்தார் கவியரசு அறந்தாங்கி வருவாய் தாசில்தாராகவும் அங்கு பணியாற்றிய தாசில்தார் கருப்பையா புதுக்கோட்டை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை டாஸ்மாக் உதவி மேலாளர் விஸ்வநாதன் குளத்தூர் வருவாய் தாசில்தாராகவும், புதுக்கோட்டை தனி தாசில்தார் ராஜதுரை ஆலங்குடி தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஆலங்குடி தனி தாசில்தார் விஜயலெட்சுமி, ஆலங்குடி தனி தாசில்தாராகவும் (குடிமைப் பொருள் வழங்கல்), இங்கு பணியாற்றிய தனி தாசில்தார் செல்வ விநாயகம், புதுக்கோட்டை தனி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 34 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.