சூரிய மின் உற்பத்தி சோலார் தகடுகள் அமைப்பது தொடர்பான முகாம் 6-ந் தேதி நடக்கிறது




பிரதம மந்திரி சூரிய ஒளி வீட்டு மின்சார திட்டத்தின் கீழ் மானிய விலையில் அனைத்து வீடுகளிலும் சூரிய மின் உற்பத்தி சோலார் தகடுகள் அமைத்து மின் கட்டணத்தை குறைத்திடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மின் பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் சூரிய மின் உற்பத்தி சோலார் தகடுகள் அமைக்க விழிப்புணர்வு முகாம் வருகிற 6-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முகாமில் மின் உற்பத்தி தகடுகள் அமைக்க தேவையானவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு மேல் ரூ.78 ஆயிரமும் பெற்று பயனடையலாம்.

இந்த திட்டம் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த 15 நாட்களுக்குள் அரசு மானியம் பயன்பாட்டாளர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்த முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்ப பெறுவதுடன், மின்கட்டண சுமையில் இருந்து விடுபடவும், எதிர்காலத்தில் மின் கட்டண உயர்வில் இருந்து விடுபடவும், எளிய பராமரிப்பு மூலம் சுமார் 27 ஆண்டுகள் சூரிய தகடுகள் மின் உற்பத்தி செய்வதால் நீண்ட காலத்திற்கு பயனடையலாம். எனவே, விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு முன்பதிவு செய்து பிரதம மந்திரி சூரிய ஒளி வீட்டு மின்சார திட்டத்தின் கீழ் மானிய விலையில் சோலார் தகடுகள் நிறுவி நிரந்தரமாக பயனடையலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயா மேரி தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments