புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அனைத்து அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடனே வழங்க வேண்டும்.
ஓய்வூதிய திட்டம்
தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து 25 சதவீதம் ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை படிப்படியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.