அறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் 2026: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்!



தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 4) காலை 8 மணி முதல் தொடங்கி நள்ளிரவு வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

முன்னதாக, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்குப்பதிவு அமைதியான முறையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்க விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்காளர்கள் விபரம்: கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் 3,908 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,964 பேரும், பெண்கள் 1,944 பேரும் அடங்குவர்.

கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்குகள்: நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் இக்கிராமத்தில் மொத்தம் 2,860 வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். ஆண்கள் 1,187 பேரும், பெண்கள் 1,673 பேரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் 2262 வாக்குகள் பெற்று முதல் இடத்தையும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிட்ட முகமது பர்வேஸ் 458 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமி 98 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட கவிதா ஸ்ரீகாந்த் 18 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும், தமிழக வாழ்வுரிமை கட்சி கட்சி சார்பில் போட்டியிட்ட நஜிம் கான் 9 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.

கோபாலப்பட்டிணம் வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கோபாலப்பட்டிணம் பூத் பகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அதிகாரப்பூர்வ விபரம் பின்வருமாறு:

 

தேர்தல் முடிவுகள் (Election Results Table)

GPM Media
வேட்பாளர் (Candidate) கட்சி (Party) பூத்-160
T: 1028
P: 720
பூத்-161
T: 999
P: 735
பூத்-162
T: 1066
P: 776
பூத்-163
T: 815
P: 629
மொத்தம்
Total Votes
GPM Media முகமது பர்வேஸ்.ஜா TVK 155 112 114 77 458
GPM Media ராமச்சந்திரன்.தி INC 536 575 621 530 2262
GPM Media கவிதா ஸ்ரீகாந்த் BJP 4 8 3 3 18
GPM Media முத்துலெட்சுமி.ச NTK 20 33 30 15 98
GPM Media நஜிம் கான்.மு TAVK 1 3 4 1 9
GPM Media அப்துல் ஜப்பார்.ச IND 1 1 0 1 3
GPM Media அய்யப்பன்.ரா IND 0 0 0 0 0
GPM Media அருணகிரி.மு IND 0 1 0 0 1
GPM Media உடையப்பன்.மு IND 1 0 0 0 1
GPM Media கார்த்திகேயன்.நெ IND 0 0 0 0 0
GPM Media காளிமுத்து.ப IND 0 0 1 0 1
GPM Media சாகுல் ஹமீது.நூ IND 1 0 1 0 2
GPM Media சுந்தர்.அ IND 0 0 1 0 1
GPM Media தெட்சிணாமூர்த்தி IND 0 0 1 1 2
GPM Media முருகரெத்தினம்.த IND 0 0 0 0 0
GPM Media நோட்டா NOTA 1 2 0 1 4
மொத்தம் (Total Polled) 720 735 776 629 2860

வேட்பாளர்களின் வாக்குச் சதவீத ஒப்பீடு

GPM Media | Election Results Percentages

ராமச்சந்திரன்.தி INC 79.09% (2,262)
முகமது பர்வேஸ்.ஜா TVK 16.01% (458)
முத்துலெட்சுமி.ச NTK 3.43% (98)
கவிதா ஸ்ரீகாந்த் BJP 0.63% (18)
நஜிம் கான்.மு TAVK 0.31% (9)
நோட்டா NOTA 0.14% (4)
அப்துல் ஜப்பார்.ச IND 0.10% (3)
சாகுல் ஹமீது.நூ IND 0.07% (2)
தெட்சிணாமூர்த்தி IND 0.07% (2)
அருணகிரி / உடையப்பன் / காளிமுத்து / சுந்தர் IND தலா 0.03% (1)
அய்யப்பன் / கார்த்திகேயன் / முருகரெத்தினம் IND 0.00% (0)

அறந்தாங்கி தொகுதியை தட்டிப் பறித்தது தவெக: முகமது பர்வேஸ் அபார வெற்றி!

கோபாலப்பட்டிணம் பூத் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அறந்தாங்கி தொகுதி முழுமைக்குமான ஒட்டுமொத்த தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதல் தேர்தலிலேயே அபார வெற்றியைப் பதிவு செய்து அத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.

இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஜே.முகமது பர்வேஸ், காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க மூத்த வேட்பாளரான டி. ராமச்சந்திரனைத் தோற்கடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஒட்டுமொத்த தொகுதி வாக்கு விபரம் 

அறந்தாங்கி தொகுதியில் உள்ள மொத்தம் 2,29,792 வாக்காளர்களில், ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 1,81,018 (78.77%) வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் ஆண்கள் 83,109 பேரும், பெண்கள் 97,908 பேரும், இதர வாக்காளர் ஒருவரும் வாக்களித்திருந்தனர்.

வெற்றி விளிம்பு 

புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பச் சுற்றிலிருந்தே முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளர் முகமது பர்வேஸ், இறுதிச் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளரை விட 10,062 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வாகை சூடினார்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments