மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி: புதுக்கோட்டையில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்




மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப்பாதையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்கிறது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

மதுரை ரெயில்வே கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாமல், மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து பின்னர் மயிலாடுதுறைக்கு செல்லும்.

இதேபோல் நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) இன்று (வியாழக்கிழமை) மற்றும் 17-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சி வந்து பின்னர் மும்பைக்கு புறப்பட்டு செல்லும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 16-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சி வந்து பின்னர் ஹவுரா புறப்பட்டு செல்லும்.

புதுக்கோட்டை வழியாக...

குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16128) இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

கன்னியாகுமரி - ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 17070) நாளை (வெள்ளிக்கிழமை) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சி வந்து பின்னர் ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்லும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16363) வருகிற 20-ந்தேதி் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் மாற்றுப் பாதையாக விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து பின்னர் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments