புதுக்கோட்டை அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). விவசாயி. இவரது மகன் ராமநாதன். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு கொல்லைக்கட்டில் உள்ள தோட்டத்தில் பயிர்களுக்கு மருந்து அடிக்க சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
35 பவுன் நகைகள் கொள்ளை
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியசாமி உள்ளிட்டவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 35 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.