கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து விருதுநகர், மானாமதுரை, அறந்தாங்கி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்(எண்:06031) வருகிற 13-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்(எண்:06032) வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 14-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில், இரண்டு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 மூன்றடுக்கு எகனாமி வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரெயில் இருமார்க்கங்களிலும், கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டிணம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.