சட்டமன்ற தேர்தல்2026: வாக்கு எண்ணிக்கை நிறைவு... அறந்தாங்கி தொகுதியில் எந்த கட்சிக்கு எத்தனை வாக்குகள்? முழு விவரம்!...



தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஜெ.முகமது பர்வேஸ், காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க வேட்பாளர் டி.ராமச்சந்திரனைத் தோற்கடித்தார்.
 

வாக்குப்பதிவு விவரம்

அறந்தாங்கி தொகுதியில் மொத்தம் 2,29,792 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 1,81,018 (78.77%) வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்கள் 83,109 பேரும், பெண்கள் 97,908 பேரும், இதர வாக்காளர் ஒருவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்

வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகள்:

வாக்குச் சாவடி விவரம்
வா.எண் வேட்பாளர் கட்சி EVM தபால் மொத்தம் %
1முகமது பர்வேஸ்.ஜாதவெக 72661583
2ராமச்சந்திரன்.திகாங் 62449733
3கவிதா ஸ்ரீகாந்த்பாஜக 31147309
4முத்துலெட்சுமி.சநாதக 9871104
5நஜிம் கான்.முதவாக 7677
6அப்துல் ஜப்பார்.சசுயே 3193
7அய்யப்பன்.ராசுயே 1362
8அருணகிரி.முசுயே 2091
9உடையப்பன்.முசுயே 1340
10கார்த்திகேயன்.நெசுயே 1472
11மகாளிமுத்து.பசுயே 7548
12சாகுல் ஹமீது.நூசுயே 7980
13சுந்தர்.அசுயே 2912
14மெட்சிணாமூர்த்திசுயே 4017
15முருகரெத்தினம்.தசுயே 3023
16நோட்டா 5755
மொத்தம் 100%

 வெற்றி விவரம்:

புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மொத்தம் 23 சுற்றுகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளர் முகமது பர்வேஸ், காங்கிரஸ் வேட்பாளரை விட 10,062 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வாகை சூடினார்.

வெற்றிக்கான காரணங்கள்

தொகுதி முழுவதும் நிலவிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் இளைஞர்களின் அமோக ஆதரவு தவெகவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றிலிருந்தே முகமது பர்வேஸ் முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அறந்தாங்கி தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.


எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments