கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கோடை மழை 6 நாட்களுக்கு பெய்யக் கூடும் என்றும், புதுக்கோட்டை உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை மழை
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில், ஆங்காங்கே அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த சூழலில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கோடை மழை தமிழ்நாட்டில் பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள்கர்நாடகா மற்றும் மராட்டியம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால் இந்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 நாட்களுக்கு பெய்யக்கூடும்
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந்தேதி (புதன்கிழமை) வரையிலான 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களிலும் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், டெல்டா, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.