10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி



தமிழகத்தில்  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை உடனடியாக மாணவர்கள் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆகும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.

பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை

100க்கு 100 பெற்றவர்கள் விபரம்

வ.எண் பாடம் 100க்கு 100
1 தமிழ் 34
2 ஆங்கிலம் 92
3 கணிதம் 3,194
4 அறிவியல் 10,476
5 சமூக அறிவியல் 3,336
பாட வாரியான தேர்ச்சி சதவீதம்

தேர்ச்சி சதவீதம் விபரம்

வ.எண் பாடம் தேர்ச்சி சதவீதம்
1 தமிழ் 98.43%
2 ஆங்கிலம் 99.44%
3 கணிதம் 97.36%
4 அறிவியல் 98.00%
5 சமூக அறிவியல் 97.93%

பள்ளி வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்

பள்ளி வகைகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்

வ.எண் பள்ளி வகைகள் தேர்ச்சி சதவீதம்
1 அரசுப் பள்ளிகள் 91.86%
2 அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%
3 தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.14%
4 இருபாலர் பள்ளிகள் 94.42%
5 பெண்கள் பள்ளிகள் 96.42%
6 ஆண்கள் பள்ளிகள் 88.50%
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவ, மாணவிகள் பெற்ற தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?

10th பொதுத்தேர்வு: மாணவ, மாணவிகள் பெற்ற தேர்ச்சி சதவீதம்

வகை எண்ணிக்கை தேர்ச்சி சதவீதம்
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 8,21,105 94.31%
மாணவிகள் (Girls) 4,19,891 96.47%
மாணவர்கள் (Boys) 4,01,214 92.15%
குறிப்பு: மாணவர்களை விட 4.32% மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 11,174
ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு நடப்பாண்டு மட்டும் விதிவிலக்கல்ல. கிட்டதட்ட 4 சதவீதம் அதிகமாக மாணவிகள் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.47 என்பது கவனிக்கத்தக்கது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% தேர்ச்சி
தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சி
மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சி


எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments