காப்புறுதி திட்டத்தில் இணைய வருகிற 31-ந் தேதிக்குள் புதுக்கோட்டை மீனவர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விபத்து காப்புறுதி நிவாரணம்
புதுக்கோட்டை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து பிரதான் மந்திரி மத்சயா சம்பட யோஜானா திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டத்தை செயல்படுத்துகின்றன. மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது விபத்தில் மரணமடையும் மீனவர்களின் குடும்பத்தினருக்கும், அல்லது நிரந்தர ஊனமுற்ற மீனவர்களுக்கும் இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இந்த குழு விபத்து காப்புறுதி நிவாரணம் விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நடப்பாண்டில் (2026-27) மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கடல் மீனவர்கள் அனைவரும் தவறாமல், வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது விவரங்களை தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் போர்டலில் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நேரில் தொடர்பு கொள்ளலாம்
இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும், பதிவேற்றம் செய்வதில் வழிகாட்டுதல் தேவைப்படுவோர் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மணமேல்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி குறித்த காலத்திற்குள் காப்புறுதி திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.