கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83% தேர்ச்சி!



2025-2026 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி 83% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.தேர்ச்சி விபரங்கள்
இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் மொத்தம் 47 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 39 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 83% ஆகும்.

சாதனை படைத்த மாணவர்கள்
பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் விபரம் வருமாறு,


Leaderboard Table UI
1

ஜோ. ஸ்ரீவித்யா

முதலிடம்
401 / 500
2

சி. ரபியா பேகம்

இரண்டாம் இடம்
383 / 500
3

மு. அகமது

மூன்றாம் இடம்
369 / 500
வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களையும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments