ரியாத் விழி அமைப்பின் 6-வது இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: ஜூன் 6-ல் நடக்கிறது!



இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மண்டல விழி அமைப்பின் (மனிதவள மேம்பாட்டு அணி) சார்பாக, 2026ஆம் கல்வியாண்டிற்கான "6-வது இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" வரும் ஜூன் 6-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

​இம்மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு "பொறியியல் படிப்பு தொடர்பான கல்வி வாய்ப்புகளும் அதில் கொட்டிக் கிடக்கும் புதிய படிப்புகளும் அதனால் ஏற்படும் வேலை வாய்ப்புகளும்" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறப்புரையாளர்
​இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் விழி அமைப்பு மாநில செயலாளரான Er. அப்துல் சமது அவர்கள் சிறப்புரையாளராகக் கலந்துகொண்டு, பொறியியல் துறையில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றவுள்ளார். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கும் அவர் விரிவான விளக்கம் அளிக்கவுள்ளார்.

​நிகழ்ச்சி நேர விபரங்கள்
​வரும் ஜூன் 6, 2026 அன்று நடைபெறும் இந்நிலை நிகழ்வு, பல்வேறு நாடுகளின் நேரப்படி கீழ்வருமாறு ஒளிபரப்பப்படும்:
​சவூதி, குவைத், கத்தார், பஹ்ரைன் நேரம்: இரவு 7:00 மணி முதல்
​அமீரக (UAE) நேரம்: இரவு 8:00 மணி முதல்
​இந்திய நேரம்: இரவு 9:30 மணி முதல்
கலந்துகொள்ளும் வழிமுறைகள்
​தங்கள் குழந்தைகளைப் பொறியியல் பட்டதாரியாக உருவாக்க விரும்பும் பெற்றோர்களும், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளும் இந்த இணையவழி முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு விழி அமைப்பின் மத்திய மண்டலம் (ரியாத், சவுதி அரேபியா) சார்பில் சமூக அக்கறையோடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இணைவதற்கான Zoom (ஜூம்) விபரங்கள்:
​ஜூம் ஐடி (Zoom ID): 823 8889 6219
​பாஸ்வேர்ட் (Password): தேவையில்லை (Direct Entry)
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments