புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கோடியக்கரையில் புதிய சுற்றுலாத்தலம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புகழ்பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு கூடுதல் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.
அதேபோல், முத்துகுடா கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் பூங்கா அமைப்பதுடன், அங்கு தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார், இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.