GPM மீடியாவின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி: கோபாலப்பட்டிணத்தில் முதற்கட்டமாக அகற்றப்பட்டன ஆபத்தான மின்கம்பங்கள்!



கோபாலப்பட்டிணம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தான நிலையிலும் இருந்த சேதமடைந்த மின்கம்பங்களை மின்வாரியம் இன்று புதியதாக மாற்றியமைத்தது. GPM மீடியாவின் தொடர் செய்திகள் மற்றும் பல்வேறு கட்டப் போராட்ட மனுக்களின் விளைவாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடங்களில் புதிய மின்கம்பங்கள்
முதற்கட்டமாக இன்று (12-06-2026) கோபாலப்பட்டிணத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் மாற்றப்பட்டன.
மக்கா வீதி: கடற்கரை தெரு 1-வது வீதி பகுதியில் சேதமடைந்திருந்த ஒரு மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய கம்பம் நடப்பட்டது.
அவுலியா நகர்: ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு மின்கம்பமும் இன்று புதியதாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்ற 3 கட்ட மனுக்கள்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய GPM மீடியா அட்மின் எடுத்த தொடர் நடவடிக்கைகள் இதோ:

1.மே-07 மாவட்ட ஆட்சியருக்கு முதல் மனு (மின்னஞ்சல் வழி)

முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் (E-mail) மூலம் மனு அனுப்பப்பட்டது. இதன் பேரில் மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் கள ஆய்வு செய்தார். (மனு எண்: TN/ENERGY/PDK/P/EMAIL/21MAY26/17707539)



2.மே-17 முதலமைச்சரின் உதவி மையம் (CM Helpline) மூலம் இரண்டாவது மனு

பணிகள் தாமதமானதால், CM Helpline தளத்தில் "Pole damage" என இரண்டாவது மனு பதிவு செய்யப்பட்டது. (மனு எண்: TN/ENERGY/PDK/P/PORTAL/17MAY26/17649652)



3.ஜூன்-01 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது மனு (நேரடியாக)

மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் முகாமில் GPM மீடியா அட்மின் நேரடியாகப் புகார் மனுவை அளித்தார். (மனு எண்: TN/REV/PDK/I/COLLMGDP/01JUN26/17789043)



மின்வாரியத்தின் நடவடிக்கை

மனுக்களைத் தொடர்ந்து கொடிக்குளம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் வந்தது. அதனைத் தொடர்ந்து, GPM மீடியா அட்மின் கொடிக்குளம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ஃபோர்மேனிடம் (Foreman) நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.


அதன் பயனாக, இன்று மின்கம்பங்கள் மாற்றப்படும் பணியை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர். இப்பணிகள் குறித்து ஃபோர்மேன், GPM மீடியா அட்மினுக்குத் தொலைபேசி வாயிலாக முறைப்படி தகவல் தெரிவித்தார். இந்த மின்கம்பங்கள் மாற்றும் பணியின் போது, உள்ளூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சேக்காதி ராவுத்தர் அவர்கள் களத்தில் நின்று முழு ஒத்துழைப்பு வழங்கி, பணிகள் பாதுகாப்பாக நடைபெற உதவினார்.


அதிகாரிகள் முக்கிய தகவல்

"தற்போது முதற்கட்டமாக சிறிய அளவிலான இரண்டு மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, அறந்தாங்கியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, மீதமுள்ள பெரிய அளவிலான சேதமடைந்த மின்கம்பங்களும் வரக்கூடிய நாட்களில் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்" என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் நன்றி

அபாயகரமான மின்கம்பங்களை மாற்றத் துரித நடவடிக்கை எடுத்த GPM மீடியா, முதன்முதலில் இப்பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து களத்தில் நின்ற சமூக செயற்பாட்டாளர் சேக்காதி ராவுத்தர், உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், கொடிக்குளம் மின்வாரிய உதவிப் பொறியாளர் (AE), ஃபோர்மேன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments