கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (ஆக.16) நடைபெற உள்ள மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில், ‘நபி வழி நடந்தால் நரகமில்லை’ என்ற ஆகஸ்ட் மாத பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் இன்று 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு, கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் மர்கஸ் அருகில் நடைபெற உள்ளது.

சிறப்புரையாற்றுபவர்கள் & தலைப்புகள்
சகோதரர்.K.M.A.முஹம்மது மஹ்தூம் தவ்ஹீதி (புதுகை மாவட்டத் துணைச் செயலாளர், TNTJ)
தலைப்பு: நபிவழி நடந்தால் நரகமில்லை..!

சகோதரர்.T.சேக் அலாவுதீன் (இமாம், தவ்ஹீத் மர்கஸ் - கோபாலப்பட்டிணம்)
தலைப்பு: நரகை விட்டும் காத்துக் கொள்வோம்..!

சகோதரி.ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் (மாணவி, அத்தய்யிபா பெண்கள் இஸ்லாமியக் கல்வியகம்)
தலைப்பு: குர்ஆனோடு தொடர்பு வைப்போம்..!

நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு 99435 20012, 98651 69445 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments