R.புதுப்பட்டினத்தில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்: கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்!



சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட R. புதுப்பட்டினத்தில் நேற்று ஆக.15 கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபாலப்பட்டிணம் கிராமத்தின் சார்பில் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, கோபாலப்பட்டிணம் கிராம மக்களின் நீண்ட நாள் தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி, ஊராட்சியிடம் எழுத்துப்பூர்வமான கோரிக்கை மனுக்கள் மற்றும் அழுத்தமான உரையாடல்கள் முன்வைக்கப்பட்டன.

முக்கிய கோரிக்கைகள் & விவாதம்

ஊராட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், கோபாலப்பட்டிணம் கிராமப் பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஜமாஅத் நிர்வாகிகள் கிராம சபையில் வலியுறுத்தினர். மேலும் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, உரிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments