கைவிரல் ரேகை பதிவு செய்ய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், தற்போது வரை கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு பதிவு செய்யாதவர்களுக்கு நாளை (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு இதுவரை கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யவும். மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை நடைபெற உள்ள சிறப்பு முகாமிற்கு சென்று கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பு பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள இறந்த உறுப்பினர்களது பெயர்களையும், அன்றைய தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்திட வேண்டும், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments