ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள்: புன்னகை அறக்கட்டளை சார்பாக 5,000 பனை விதைகள் நடும் விழா மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு!



முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஏரிக்கரையில் புன்னகை அறக்கட்டளையின் 9-வது ஆண்டு பனை விதைகள் நடும் பணி மற்றும் 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நீர்ப்பாசன சங்கத் தலைவர் திரு. பாண்டியன் தலைமை தாங்கினார். புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலைபிரபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, பனை விதைகளை நட்டு விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் பனை மரங்களின் பங்கு மகத்தானது. நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிர்த்து மஞ்சப்பையைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், புன்னகை அறக்கட்டளை நிர்வாகிகள் அப்பாசாமி, அழகுத்தையா, திரைப்பட நடிகர் ஈஸ்வரன், வெள்ளூர் MKN.மணி, குளத்து குடியிருப்பு சமூக ஆர்வலர் ஞானம்சிவம், சிவா, பாலகிருஷ்ணன், ஆவுடையார் கோவில் சுற்றுலாத்தலம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், த.வெ.க. நிர்வாகிகள் வீரசேகர், KM சுப்பிரமணியன், வெற்றிசிவா, ஆசார், அய்யப்பன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.

“பசுமையைப் பாதுகாப்போம்; பனை வளத்தைப் பெருக்குவோம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments