புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்பலவாணனேந்தல் ஆகிய 6 குறுவள மையங்களில் இப்போட்டிகள் தொடங்கப்பட்டன. அந்தந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டிகளில் குறுவள மையங்களுக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, பேச்ச்ப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தேசபக்திப் பாடல், தனிப்பாடல், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் குறுவள மைய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள், அடுத்து நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், அமுதா, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர் செல்வன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.