அறந்தாங்கியில் நாளை (செப்.17) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (செப்டம்பர் 17, வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டம், புதுக்கோட்டை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.

அறந்தாங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மின்சார விநியோகம், கட்டணக் குறைபாடுகள் மற்றும் மின்வாரியம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என செயற்பொறியாளர் S.குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments