ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டாணி புரசக்குடி கிராம ஊராட்சியில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் வரும் 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 11:00 மணியளவில், R.புதுப்பட்டினம் ஸ்ரீ முருகன் கோயில் அருகில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதால், ஊராட்சியின் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்குமாறு தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கியப் பொருள்கள்:
பொருள் 1: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்
நிதி அறிக்கை: 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான காலத்தில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை (படிவம் 30) மற்றும் இதர விவரங்களை வாசித்து ஒப்புதல் பெறுதல்.
பணிகள் விவரம்: 2025-26 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகளின் திட்டம், பணிப் பெயர், மதிப்பீடு (ரூ.) மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை சமர்ப்பித்தல்.
பொருள் 2: தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்
மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மற்றும் தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளை மாதம் இருமுறை (பிரதி மாதம் 5-ம் தேதி மற்றும் 20-ம் தேதி) சுத்தம் செய்தல்.
தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்தல்.
பொருள் 3: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
2026-27 நிதி ஆண்டு (01.04.2026 முதல் 30.06.2026 வரை): உருவாக்கப்பட் மனித சக்தி நாட்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் (ரூ.) பற்றிய முன்னேற்ற அறிக்கையை ஒப்பிட்டு விவாதித்தல்.
VB-GRAM (G) திட்டம் (01.07.2026 முதல் 31.07.2026 வரை): வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் தொழிலாளர் வரவு-செலவு முன்னேற்ற அறிக்கையை ஒப்பிட்டு விவாதித்தல்.
2026-27 தொழிலாளர் வரவு-செலவு திட்டம்: புதிய கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார பணிகளுக்கு கீழ் கண்ட 4 பிரிவுகளில் தேர்வு செய்தல்:
நீர் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாதுகாப்பு தொடர்பான பணிகள்.
ஊரக உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள்.
வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள்.
பருவநிலை மாற்றம் மற்றும் பாதகமான வானிலை நிலைகளை எதிர்கொள்ளும் பணிகள்.
பொருள் 5: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II
2026-27 ஆம் ஆண்டு: தேர்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
2025-26 ஆம் ஆண்டு: சிறுபாசன ஏரிகளை புதுப்பிக்க தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
பொருள் 6: சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல்
சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் குறித்து தகவல்களைத் தெரிவித்து, பணி முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
பொருள் 7: ஜல் ஜீவன் திட்டம் (JJM)
சமூக பங்களிப்பு: குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10% சமூக பங்களிப்பினை வழங்கி, அனைத்து பொதுமக்களும் பங்கேற்பதை உறுதி செய்தல்.
விழிப்புணர்வு: கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
குடிநீர் தரப் பரிசோதனை: பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களைக் கொண்டு, Field Test Kit மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து பதிவேட்டில் பதிவது.
VPDP இணைப்பு: "வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என்ற நிலைக்கு மேம்படுத்த தேவையான அனைத்து பணிகளையும் VPDP திட்டத்தில் சேர்ப்பது.
பொதுக் கட்டிடங்கள்: பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொதுக் கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் வழங்குவது.
குடிநீர் கட்டணம்: அரசாணை எண். 260, ஊ.வ (ம) ஊ.து. நாள்: 09.12.1998-ன் படி, மாதாந்திரக் கட்டணம் ரூ. 30-க்கு குறையாமல் செலுத்துவதை உறுதி செய்தல்.
குளோரினேட்டர்: தொட்டிகளில் குளோரின் கலப்பான் (Chlorinator) கருவிகளைப் பொருத்துதல்.
சான்றிதழ் & ஆதார்: 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பஞ்சாயத்து என "FHTGOT" கிராம சபை தீர்மானம் நிறைவேற்றி, குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை IMIS-Portal இல் பதிவேற்றம் செய்தல்.
பொருள் 8: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம்
திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலை: கிராம ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையைத் தக்கவைத்து 'ODF Plus - Model Village' என்ற நிலையை அடைதல்.
Swachh Sujal Gaon Gram Panchayat: "Har Ghar Jal certificate" பெற்ற கிராம ஊராட்சிகளை சுா்த்தமான மற்றும் சுகாதாரமான ஊராட்சியாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றுதல்.
திடக்கழிவு மேலாண்மை 2026: கழிவுகளை கட்டாயமாக நான்கு வழிகளில் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு: குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கவும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கும் பொதுமக்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான தீர்மானங்கள்.
பொருள் 9: இதர பொருள்கள்
கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிற பொருள்கள் ஏதேனும் இருப்பின், கிராம சபையின் ஒப்புதலுக்குக் கொண்டு வரப்படலாம்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.