நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள், உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி 636, முஸ்லிம், திர்மிதி 326.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர், தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள், அதற்குத்தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள், தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள், தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் - புகாரி 635, முஸ்லிம்.
பயன்கள்:
தொழுகைக்காக கம்பீரத்துடன் அமைதியாக வருமாறு (நபியின் மூலம்) ஏவப்பட்டுள்ளது.
தொழுகைக்காக வேகமாக நடந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ருகூவை அடைந்து கொள்வதற்காயினும் சரியே.
தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்து, அதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647, முஸ்லிம்.
பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 615, முஸ்லிம்.
பயன்கள்:
தொழுகைக்காக சீக்கிரம் செல்வதில் சிறப்பு (போனஸ்) உண்டு.
தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதில் அதிக நன்மை இருக்கிறது.
காணிக்கைத் தொழுகை
உங்களில் எவரேனும் பள்ளியில் நுழைந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்-அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 444, முஸ்லிம், திர்மிதி 315.
ஜும்ஆ தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். சுலைக்! எழுந்து இரண்டு ரக்அத்துகள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் வந்தால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் எனவும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பா ளர்- ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம், புகாரி 1166.
பயன்கள்:
பள்ளியில் நுழையும் போது அங்கு அமர விரும்புபவர் இரு ரக்அத்துகள் தொழுவது விரும்பத்தக்கது.
ஜும்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.