பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ல் ஆரம்பம் : அட்டவணை அறிவிப்பு!



 பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிகிறது. தேர்வு கால அட்டவணையை அரசு பொது தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 தேர்வை 7.50 லட்சம் மாணவ&மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள். 2008ம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதுவோருக்கு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.


இந்த ஆண்டும் அதே போல கூடுதலாக 15 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு நேரம் ஆகும். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முக்கிய படமான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு இடையே விடுமுறை நாட்கள் உள்ளன.


தேர்வு கால அட்டவணை

8.3.2012    மொழித்தாள் ஒன்று 

9.3.2012    மொழித்தாள் இரண்டு 

10, 11ம்தேதிகள் விடுமுறை 

12.3.2012  ஆங்கிலம் முதல் தாள்

13.3.2012  ஆங்கிலம் 2ம் தாள்

14,15ம் தேதிகள் விடுமுறை

16.3.2012  இயற்பியல், பொருளியல், உளவியல்

17,18ம் தேதிகள் விடுமுறை

19.3.2012  கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவியல்

20.3.2012  வணிகவியல், மனையியல், புவியியல்

21ம் தேதி விடுமுறை

22.3.2012  வேதியியல், கணக்கு பதிவியல், சுருக்கெழுத்து.

23, 24, 25ம் தேதி விடுமுறை 

26.3.2012  உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வணிக கணிதம்

27ம் தேதி விடுமுறை 

28.3.2012  தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம், தட்டச்சு

29ம் தேதி விடுமுறை

30.3.2012  தொழில்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்.

Post a Comment

0 Comments