உருவாகிறது புதிய புயல் பேத்தை!! டிசம்பர் 15 தமிழகத்தை நோக்கி கரையை கடக்குமாம்!!! தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து



வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைந்து PETHAI பேத்தை புயலாக டிசம்பர் 13-ல் உருவாகும். அரபிக் கடல் காற்றின் சாதகம் மற்றும் தமிழக தரைப்பகுதி வெப்பநிலை உயர்வு காரணமாக புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது.

தற்போதைய ஆய்வு முடிவின்படி புயல் நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் மாவட்டங்களிடையே கரையை கடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புயல் டிசம்பர் 15/12/2018 மதியம் கரையைக்கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் காட்சி 

13/12/2018 புயல் உருவாகிறது 


14/12/2018 கரையை நோக்கி நகரும் காட்சி 

15/12/2018 கரையை நெருங்கும் காட்சி 

16/12/2018 தரை பகுதியை கடக்கும் காட்சி  

17/12/2018 கரையை கடந்த பிறகு 

புயல் கரை கடந்து திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி வழியாக அரபிக் கடல் செல்லும். இதன் காரணமாக கன மழைக்கு வாய்ப்பு உறுதியாகிவிட்டது. காற்றின் வேகம் ஆய்வில் உள்ளது.

அறிவிப்பவர்: N.செல்வகுமர்,வானிலை ஆராய்ச்சியாளர், நம்ம உழவன் வானிலை அறிவிப்பாளர்.

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். 

நமது சுகாதாரம் நமது கையில். 

மழைநீரை சேமிப்போம். 

டெங்குவை ஒழிக்க யாவரும் கரம் கோர்போம்.

நீரோட்டங்களின் ஆக்கிரமிப்புகளைத் தவிர்ப்போம்.

நீர் ஆதாரங்களை வளப்படுத்துவோம்.

Post a Comment