கோபாலப்பட்டினத்தை சேர்ந்த முஹமது நயீம் சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில்



சவூதிஅரேபியா, 09-12-2018: தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் முஹமது நயீம் சவூதி அரேபியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிகெட் அணியில் தேர்வு பெற்று தாய்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை முதல் தகுதிச்சுற்றில்  விளையாடுகிறார்.

சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து பங்குபெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

சவூதிஅரேபியா, தாய்லாந்து, ஓமன், பூட்டான், கத்தார் நாடுகள் குரூப் A தாய்லாந்திலும் ஹாங்காங், சீனா, மாலத்தீவு, குவைத், பஹ்ரைன் நாடுகள் குரூப் B ஹாங்காங்கிலும் விளையாடுகிறார்கள்.




இன்று முதல் 09/12/2018 முதல் 17/12/2018 வரை நடக்கும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு  அணிகள் ஜனவரி - பிப்ரவரி 2019 மாதங்களில் தென்ஆப்ரிக்காவில் நடைபெறும்  நேப்பால், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் நாடுகளுக்குடனான போட்டிகளில் பங்குபெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவர்.

முஹமது நயீம் பற்றிய குறிப்பு :
முஹமது நயீம் சவூதிஅரேபியாவில் வசித்துவரும் அஹமது இம்தியாஸ் - கதீஜா பீவி தம்பதிகளுக்கு ரியாத், சவூதி அரேபியாவில் பிறந்தவர்.  இவரின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் என்ற கிராமமாகும், பள்ளிபடிப்பு முழுவதும் சவூதிஅரேபியாவில் பயின்ற இவர் தற்சமயம் திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொழில் இளங்கலை படித்துவருகிறார்.

இன்று சவூதிஅரேபியா - தாய்லாந்திற்கு எதிரான போட்டியில் சவூதிஅரேபியா தாய்லாந்தை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, முன்னதாக,  5 நாட்கள் மலேசியாவில் நடந்த நட்பு ரீதியிலான நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டில் சவூதி அரேபியா வெற்றிபெற்று அணியினர் அனைவரும் சிறப்பாக விளையாடினர். நாளை டிசம்பர் 10 அன்று பூட்டான் நாட்டுடன் விளையாட உள்ளனர்.

சவூதிஅரேபியா, ரியாத்தில் இந்தியர்கள் பயிலும் இந்திய பன்னாட்டுப் பள்ளியின் முன்னாள் தாளளரான இவரது தந்தை திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் கிரிக்கெட் போட்டியை சவூதிஅரேபியாவில் அறிமுகப்படுத்தி அதன் மேம்பாட்டிற்காக பாடுபடும் SCC சவூதி கிரிக்கெட் செண்டருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டதோடு வீரர்கள் வெற்றி பெற்று சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவதாக தெரிவித்தார்.

முஹமது நயீம் அனைத்து போட்டிகளிலும் வெல்ல கோபாலப்பட்டினம் செய்திகள் இணையதளம் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Post a Comment