த .மு.மு .க சார்பாக கோபலப்பட்டினம் ரேஷன் கடை அவலநிலை கண்டித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை



புதுக்கோட்டை கிழக்கு தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேக் தாவுதீன் வெளியிடும் அறிக்கை:

 01/12/2018 புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றிய பகுதிகளுக்கு கட்சியின் அமைப்பு கிளை ஆய்வுக்கு சென்றபொழுது
கோபாலப்பட்டினம்,முத்துக்குடா  ,அரசனகரிபட்டினம் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நிரந்தர பணி ஆட்கள் இல்லாமல் இரண்டு ரேஷன் கடைக்கு ஒரு பணியாளர் பணிபுரிவதால் வாரத்திற்கு மூன்று தினங்கள் மட்டுமே கடை திறக்கப்படுகின்றது. இதனால் முறையாக பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. 

மேலும் ரேஷன் கடை சம்மந்தமாக சில அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விசாரித்தபொழுது ஆவுடையார்கோவில் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த நிலைமை தொடர்வதாக தகவல் கூறினார். தொடர்ந்து பணியாட்கள் இல்லாமல்  செயல்படுவதற்கு த.மு.மு.க சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன் உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் நிரந்தரமாக பணிபுரிவதற்கு ரேஷன்கடை ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் இல்லையெனில் த.மு.மு.க மாவட்ட நிர்வாக குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Post a Comment